என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அதிமுக நிர்வாகி
நீங்கள் தேடியது "அதிமுக நிர்வாகி"
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்று திரும்பியபோது விபத்தில் இறந்ததால் அதிமுக சார்பில் 2 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தனர்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாடு தெற்கு ஒன்றியம், ஆம்பலாப்பட்டு தெற்குத் தெரு கிளைக் கழகப் பொருளாளர் சுந்தர பாண்டியன், மதுக்கூர் பேரூராட்சியைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு சேகர் ஆகியோர், நேற்று சென்னையில் நடைபெற்ற, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்துக்களில் தங்கள் இன்னுயிரை இழந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அ.தி.மு.க. சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்கவேண்டும் என அதிமுக நிர்வாகி தலைமையில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். #Sterlite #ThoothukudiProtest
சென்னை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந்தேதி பொது மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் கலவரம் வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.
இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை சில சமூக விரோதிகளின் பொய் பிரசாரத்தால் மக்களின் எண்ணத்தை பாதிக்கும் வகையில் எங்கள் கிராம மக்களின் கருத்துக்கு மாறாக மூடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் எங்கள் பகுதியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைகளை இழந்து அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
நாங்கள் விவசாயம் செய்யும் சூழ்நிலையும், வசதியும் இல்லாததால் உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம். இந்த தொழிற்சாலையை திறக்க அனுமதிப்பதன் மூலம் எங்களது உணவு தேவையும், அடிப்படை தேவையும் நிறைவேறும். எனவே எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க இந்த தொழிற்சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Sterlite #ThoothukudiProtest

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மனு அளித்து வருகிறார்கள். இதனிடையே தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி மக்கள் சார்பாக முன்னாள் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ் தலைமையில் ஏராளமானோர் சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தனர்.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை சில சமூக விரோதிகளின் பொய் பிரசாரத்தால் மக்களின் எண்ணத்தை பாதிக்கும் வகையில் எங்கள் கிராம மக்களின் கருத்துக்கு மாறாக மூடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் எங்கள் பகுதியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைகளை இழந்து அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
நாங்கள் விவசாயம் செய்யும் சூழ்நிலையும், வசதியும் இல்லாததால் உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம். இந்த தொழிற்சாலையை திறக்க அனுமதிப்பதன் மூலம் எங்களது உணவு தேவையும், அடிப்படை தேவையும் நிறைவேறும். எனவே எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க இந்த தொழிற்சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Sterlite #ThoothukudiProtest
விவசாயி கொலை வழக்கில் வத்தலக்குண்டு அ.தி.மு.க நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
வத்தலக்குண்டு விராலிபட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகளை அப்பகுதியை சேர்ந்த சிலர் கல்லால் தாக்கியுள்ளனர். இதனால் இருதரப்பிற்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் அழகர்சாமி தரப்பினர் சுப்புராஜ் தரப்பை சேர்ந்த ராஜா அழகர்சாமியை (வயது32) அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
இதுதொடர்பாக அழசர்சாமி, அவரது மகன் சதீஸ்குமார், தெய்வேந்திரன், ரவிச்சந்திரன், நாகராஜன், ராமசாமி, சுதாகர் ஆகிய 7 பேர் மீது வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதில் சுதாகர் அ.தி.மு.க மாணவரணி ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு நடந்து கொண்டிருந்தபோது ராமசாமி இறந்துவிட்டார். திண்டுக்கல் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதுரசேகரன் வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். #tamilnews

காஞ்சீபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் செய்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த சி.ஹரிபிரபாகரன் (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஹரிபிரபாகரன், தனது டுவிட்டர் பக்கத்தில் ஊடகத்தினரை பற்றி தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டதால், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஹரிபிரபாகரன், தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆஸ்பத்திரிக்குள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, செய்தி சேகரிக்கவும், படம் எடுக்கவும் பத்திரிகையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பிஸ்கட்டுகளுக்காக குரைக்கும் தெரு நாய்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு பதிலாக நுழைவு வாயிலிலேயே நிறுத்திவைக்கப்படும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

×

X